free website hit counter

சிம்மம் : தமிழ் புத்தாண்டுப் பலன்கள்

ஜோதிடம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ஶ்ரீ விஸ்வாவசு தமிழ்புத்தாண்டில் சிம்ம இராசிக்கான பலன்கள் இங்கே தரப்பட்டுள்ளன.  4தமிழ்மீடியா வாசகர்களுக்காக, பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast) விரிவாகக் கணித்துத் தந்துள்ள இப்பலன்கள்  கோசார ரீதியான பொதுப் பலன்கள்.

உங்கள் தசாபுத்திகளின அடிப்படையிலும், கிரகநிலைகளின்படியும், இப் பொதுப் பலன்களில் மாற்றம் காணப்படலாம் என்பதனையும் வாசகர்கள் கருத்திற் கொள்ளவும். உங்கள் தனிப்பட்ட ஜாதகரீதியான தனித்துவமான பலன்களை கீழே தரப்பட்டுள்ள ஜோதிடரின் தொடர்பு விபரங்களின்  வழி. தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.

சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)

கிரகநிலை:
தன வாக்கு குடும்ப  ஸ்தானத்தில் கேது - தைரிய வீரிய  ஸ்தானத்தில் சந்திரன் - களத்திர  ஸ்தானத்தில் சனி - அஷ்டம  ஸ்தானத்தில் ராகு, சுக்ரன்(வ), புதன் - பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன் - தொழில்  ஸ்தானத்தில் குரு - அயன சயன போக  ஸ்தானத்தில் செவ்வாய் என வலம் வருகிறார்கள்

கிரகமாற்றங்கள்:
26-04-2025 அன்று ராகு பகவான் அஷ்டம  ஸ்தானத்தில்  இருந்து களத்திர  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
26-04-2025 அன்று  கேது பகவான் தன வாக்கு குடும்ப  ஸ்தானத்தில்  இருந்து ராசிக்கு மாறுகிறார்.
02-07-2025 அன்று சனி பகவான் வக்ர நிலை ஆரம்பம்.
17-11-2025 அன்று சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார்.
06-03-2026 அன்று சனி பகவான் களத்திர  ஸ்தானத்தில்  இருந்து அஷ்டம  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
11-05-2025 அன்று குரு பகவான்  தொழில்  ஸ்தானத்தில் இருந்து லாப  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
08-10-2025 அன்று குரு பகவான்  லாப  ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
18-11-2025 அன்று குரு பகவான் வக்ரம் ஆரம்பம்
21-12-2025 அன்று வக்ர நிலையில் இருக்கும் குரு பகவான் அயன சயன போக  ஸ்தானத்தில்  இருந்து லாப  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
17-03-2026 அன்று குரு பகவான் வக்ர நிவர்த்தி

பலன்:
தனது தோரணையாலும் அதிகாரத்தினாலும் வேலைகளை சாதிக்கும் திறமை கொண்ட சிம்ம ராசி அன்பர்களே உங்களுடைய தைரியம், தன்னம்பிக்கை, நேர்மை ஆகியவை பலமாகும். சில வேளைகளில் முன்கோபம், பிடிவாதம், எடுத்த முடிவில் மாறாத தன்மை ஆகியவை பலவீனமாகும்.

இந்த ஆண்டு மனதில் உத்வேகம் உருவாகி உயர்வான செயல்களைச் செய்வீர்கள். முன் வைத்த காலை பின் வைக்க மாட்டீர்கள். நீங்கள் யாரையாவது நம்பி விட்டால் வாரி வழங்கி விடுவீர்கள். எடுத்த முடிவில் இருந்து சிறிதும் இறங்கி வர மாட்டீர்கள்.

சிறப்பான ஜோதிடக் கணிப்பில்  தினசரி பலன்களை எங்கள் 'உலா' செயலியில் தினமும் காணலாம்.

உலா செயலி இணைப்பு

குடும்பம்:

கணவன் மனைவி இடையெ ஒற்றுமை அதிகரிக்கும். மூத்த சகோதரம் வழிசார்ந்த உறவினர்களால் அனுகூலமான பலன்கள் உருவாக குரு தனது பார்வையை செலத்துகிறார். இதனால் மனம் மகிழ்ச்சி கொள்ளும். சமூக காரியங்களில் தலையிட்டு திறம்பட பணியாற்றி நற்பெயர் பெறுவீர்கள். அரசு சார்ந்த மற்றும் தனியார் வங்கிகளின் உதவிகளை பெற்று வீடு மற்றும் மனைகளை வசதிக்கேற்ப மாறுதல் செயவீர்கள். திருமணம் ஆனவர்களுக்கு சந்தாண பாக்கியம் கிட்டும். பிள்ளைகள் உங்கள் எண்ணத்திற்கேற்ப நடந்து கொண்டு நற்பெயரை காப்பாற்றுவர்கள்.

வீடு மனைகள் வாங்கவும் அதனை அழகுபடுத்தவும் நல் வாய்ப்புகள் உண்டாகும்.  வாழ்க்கைத்துணையின் மூலம் நற் பலன்கள் தர உள்ளதால் அவரது பெயரில் புதிய சொத்து வாங்கும் யோகும் உள்ளது. குடும்ப ஒற்றுமை மேன்யைடையும்.  தந்தை வழி உறவினர்கள் தகுந்த உதவிகள் தருவார்கள். குல தெய்வ அருள் தகுந்த சமயத்தில் நல் வழிகாட்டும். புகைப்பிடிப்பது, மது போன்ற பழக்கங்களை விட்டு விடுவது நல்லது. 

ஆரோக்கியம்:
உடல் நலத்தில் பாதிப்பு வர வாய்ப்பு இருப்பதால், அதற்கு தகுந்த பயிற்சிமுறைகளும் மருத்தவ சிகிக்சை முறைகளும் பின்பற்றி ஆரோக்கிய வாழ்வு பெறலாம். விஷப் பிராணிகளிடம் விலகி இருத்தல் நலம். உடல் நலத்தில் தகுந்த கவனம் வேண்டும். 

பொருளாதாரம்:
குடும்ப அங்கத்தினர்கள் உங்களுக்கு சிறந்த ஒத்துழைப்பு தருவார்கள். ஒய்வுக்குகூட நேரமின்றி உழைப்பே பிரதானமாக செயல்படுவீர்கள். பணப் பிரச்சனை தீரும். 

உத்தியோகஸ்தர்கள்:
உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களிடம் இருந்து வந்த மனஸ்தாபங்கள் குறையும். உங்கள் செயலில் கனிவான தன்மை நிறைந்து இருக்கும். இதனால் நற்பெயர் பெறுவீர்கள். மேலிட்த்தின் மூலம் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். உங்களுக்கான அங்கீகாரம் உங்கள் எண்ணத்திற்கும் செயலுக்கும் புதிய உத்வேகம் தரும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வுகள் உண்டு.

புதிய பதவிகளும் பொறுப்புகளும் உங்களைத் தேடி வரும். கடுமையாக உழைத்து பொருளாதாரத்தைப் பெருக்கிக்கொள்வீர்கள். முடங்கிய செயல்களை மீண்டும் செய்ய முனைவீர்கள். முட்டுக்கட்டைகளைத் தகர்த்தெறிந்து முன்னேறுவீர்கள். அயல்நாடு சம்பந்தமான செயல்களிலும் ஈடுபடுவீர்கள். ஷேர் துறைகளின் மூலம் நல்ல ஆதாயத்தைக் காண்பீர்கள். மனதை ஒருமுகப்படுத்தும் யோகா, ப்ராணாயாமம் போன்றவற்றை கற்பீர்கள். நிலுவையில் இருந்த பணம் உங்களுக்கு திரும்ப கிடைக்கும். கடன் சுமைகள் நீங்கி நிம்மதியான வாழ்க்கை உண்டாகும். 

வியாபாரிகள்:
வியாபாரிகள் தொழிலதிபர்களுக்கு தகுந்த லாபங்கள் கிடைக்கும். தங்கும் விடுதிகள்,  சுற்றுலா பஸ்கள், சுற்றுலா கைடுகள் ஆகிய தொழில் செய்பவர்கள் சிறப்பான வளர்ச்சி காண்பார்கள். தொழிலை அபிவிருத்தி செய்ய தேவையான நிதி உதவிகளை வங்கிகளில் தாராளமாக பெறுவார்கள். விருதுகளும். பாராட்டுகளும் கிடைக்கப் பெறுவார்கள். உணவுப்பொருள் உற்பத்தி செய்பவர்கள் புதிய ஆர்டர்கள் பெற்று தொழில் வளர்ச்சி காண்பார்கள். நவரத்தின கற்கள், தங்கம் வெள்ளி விற்பவர்களுக்கு பொன்னான காலமிது. மிகப்பெரிய ஆஸ்பத்திரிகளை நடத்துபவர்கள் வசதிகளை ஏற்படுத்தி கூடுதல் வருமானம் பெறுவார்கள். விவசாயப் பொருட்களை குத்தகை முறையில் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபம் பெறுவார்கள். கட்டுமான பொருள் விற்பனையில் ஈடுபட்டுள்ளவர்கள் சனியின் அருளால் வளம் பெறுவார்கள். தொழிலில் ஏற்பட்ட நிலுவை கடன்களை அடைப்பீர்கள். உங்கள் நிறுவனத்திற்கு புதிய சொத்துகள் வாங்கும் யோகம் உண்டாகும்.

பெண்கள்: 
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு கடந்த காலங்களில் இருந்து வந்த பொருளாதார தடங்கல்கள் விலகும்.  செழிப்பான பணப்புழக்கம் ஏற்படும். அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரிவர்கள் தங்கள் பணிகளில் திறமையான நிர்வாகம் செய்து உயரதிகாரிகளிடம் நற்பெயரும்,  பதவி உயர்வும் பெறுவார்கள். இனிமையாக பேசுதலும் சமூகத்தில் புகழ்பெறும் வாயப்புகளும் நிறைய உண்டு. வீட்டை அலங்கரிப்பதில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். 

அரசியல்வாதிகள்: 
சேவை செய்வதில் இருந்து வந்த மந்த நிலை மாறும். ஆன்மீக எண்ணங்களும் நாத்திக செயல்பாடுகளும் சம நிலையாக இருக்கும். கோயில்களுக்கான திருப்பணிகளில் நிறைவான பொருளாதார பங்களிப்பை உறவினர் மற்றும் நண்பர்களிடம் நன்கொடை பெற்று தன் பங்கையும் இணைத்து திருப்பணிக்கு வழங்குவார்கள்.

கலைஞர்கள்: 
கலைஞர்கள் தங்கள் திறமையை  நன்கு பயன்படுத்தி ரசிகர்களிடம் புகழ் பெறுவார்கள். பொருளாதார வகையிலும் நிறைந்த முன்னேற்றம் பெறுவார்கள். தொழிலில் புதிய சாதனைகளை நிகழ்த்தி நற்பெயரும், பரிசும், பதக்கமும் பெறுவார்கள். 

மாணவர்கள்: 
முதல்தர மாணவராக தேர்ச்சி பெறுவார்கள்.  சக மாணவர்களின் பாடம் தொர்பான சந்தேகங்களுக்கு உதவும் வழியில் செயல்படுவீர்கள். தேவையான செலவுகளுக்கு பொருளாதாரம் கிடைக்கும். நற்பெயர் பெறுவீர்கள். கல்விக்கு உதவும் வகையிலான சுற்றுலாக்களில் பங்கு பெறுவீர்கள். பேச்சில் இனிமையை சேர்த்துக் கொள்ளுங்கள். உடல் நலத்தில் தகுந்த கவனம் செலுத்துவதால் மட்டுமே ஆரோக்கியம் பெற முடியும். 

மகம்:
இந்த ஆண்டு குடும்பத்தில் இருந்த குழப்பம் நீங்கும். கணவன், மனைவிக்கிடையே  இருந்த மனவருத்தம்  நீங்கும். பிள்ளைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். எதிலும் கவனமாக இருப்பது நல்லது. வெளியூர் பயணங்கள் மனதிற்கு மகிழ்ச்சி தரும். கவலை வேண்டாம். கடன் விவகாரங்களில் யோசித்து செயல்படுவது நல்லது.  கடித போக்குவரத்து மூலம் நல்ல தகவல் வரும். வீண் மன சஞ்சலம் ஏற்பட்டு நீங்கும்.  சுபகாரியங்களில் இருந்த பின்னடைவு நீங்கும். எதிர்பார்த்த பணவரவு இருக்கும். நீண்ட நாளைய ஆசை நிறைவேறும். மனதிற்கு பிடித்த காரியங்கள் நடக்கும். அனைவரிடமும் சந்தோஷமாகப் பழகுவீர்கள். மன நிம்மதி உண்டாகும்.

பூரம்:
இந்த ஆண்டு சாதகமான முன்னேற்றம் ஏற்படப்போவது உறுதி. நல்ல அறிமுகம் கிடைக்கப் பெற்று முன்னேற்றம் உண்டு. கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ள வேண்டும். வியாபாரிகளுக்கு நெடுநாட்களாக இருந்து வந்த கடன்கள் தீரும். கூட்டு வியாபாரத்தில் கணிசமான லாபம் கிடைக்கும்.  வெளிநாடுக்கு ஏற்றுமதி செய்வோருக்கு புதிய ஆர்டர்கள் வந்து சேரும். புதிய இட ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். தொழிற்சாலைகள் வைத்திருப்போருக்கு நல்ல லாபம் கிடைக்கும். பொதுவான விஷயங்களில் தலையிடுவோருக்கு உங்கள் கருத்துக்களை மற்றவர்கள் ஆமோதிப்பார்கள். வியாபார போட்டிகள் சாதகமான முடிவினைத் தேடித் தரும். கவலை வேண்டாம்.

உத்திரம் - 1:
இந்த ஆண்டு உங்களின் புத்திசாதூரியம் வெளிப்படும். கல்வியில் இருந்த  தொய்வு நீங்கும். குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் தீர்வதற்கு கவனம் செலுத்துவீர்கள். அடுத்தவர்களால் ஏற்படும் கெடுதல்கள் நீங்கும். மனதில் அமைதி பிறக்கும். உங்களது பணிகளை அடுத்தவரிடம் ஒப்படைக்காமல் நேரிடையாக செய்யுங்கள். எல்லா வகையிலும் நன்மை உண்டாகும். தனலாபம் உண்டாகும். அடுத்தவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். எதிர்பாலினத்தாரால் செலவு  ஏற்படும். கோபத்தால் சில்லறை சண்டைகள் ஏற்படலாம். பணவரத்து கூடும். காரிய அனுகூலம் உண்டாகும்.

பரிகாரம்: முடிந்த வரை வெள்ளிக்கிழமை தோறும் அருகிலிருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று 11 முறை வலம் வரவும்.

மலர் பரிகாரம்: வெள்ளிக்கிழமை தோறும் சிவனுக்கு வில்வ மாலை சாற்றி தீபம் ஏற்றவும்.

சொல்ல வேண்டிய மந்திரம் - “ஓம் நமசிவாய”.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன், வெள்ளி

அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, தெற்கு 

அதிர்ஷ்ட நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 6 

4தமிழ்மீடியாவுக்காக: பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast

உங்கள் ஜாதகத்தினடிப்படையிலான பிரத்தியேக பலன்களை கட்டண சேவை மூலம் அறிந்து கொள்ளலாம்.  ஜோதிடருன் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் : +91 78451 19542  மின்னஞ்சல்  முகவரி: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.  

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula