free website hit counter

தீபாவளி இனிப்புக்களில் கரைந்து போகும் சோன்பப்டி!

முற்றம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

கோலாகல தீபாவளி மீண்டும் வந்துவிட்டது, சந்தைகளிலும் சரி நமது வாய்களிலும் சரி இனிப்புகளால் நிரம்பி வழியத்தொடங்கிவிட்டன. ஆமால் சில கூடுதல் சர்க்கரை மற்றும் கலோரிகளை சேர்க்காமல் கொண்டாட்டங்களில் மகிழ்ச்சி இல்லை.

இந்தியாவின் பன்முகத்தன்மையால் பல வகையான இனிப்பு வகைகள் உள்ளன. அவ்வொன்றின் சுவைகளால் அதிகம் விரும்பி உண்ணவைப்பவை. ஆனால் சமீபகாலத்தில் ஒரு இனிப்புவகை வெறுக்கப்படுகிறது.

கடலை மாவு, மைதா, சர்க்கரை மற்றும் நெய் ஆகியவற்றால் உருவாக்கப்பட்ட சோன்பப்டி கடந்த சில ஆண்டுகளாக சமூக வலைதளங்களில் நகைச்சுவை மற்றும் மீம்ஸ்களால் அவமதிக்கப்படுகிறது.

ஏன் மலிவு விலையில் கிடைக்கும் எளிய இனிப்புவகை சோன்பப்டி எப்படி வெறுப்பின் பொருளாக மாறுகிறது என செய்தி இணையதளம் ஒன்றில் வெளியான பதிவின் தமிழாக்கம் இது.

அதற்கான பதில் அதன் பொருளாதாரம்; மதிப்பு மற்றும் சுவை உள்ளிட்டவற்றில் இருக்கிறது என்று விரிகிறது அந்த கட்டுரை.

இனிப்புகளை வாங்குவதில் மக்கள் ஆர்வமாக இருப்பதைப் பற்றிய புள்ளிவிவரங்களைத் தேட Google போக்குகளின் தரவைப் பயன்படுத்தியபோது, சில விளக்கம் கிடைத்திருக்கிறது. குலாப் ஜாமூன், ரஸ்குல்லா, காஜு கட்லி மற்றும் பர்ஃபி போன்ற ஆல் டைம் ஃபேவரிட்களுடன் ஒப்பிடும்போது, சோன் பப்டி மிக குறைவான வீதத்தை காட்டுகிறது.

மக்கள் பொதுவாக ஒரு குறிப்பிட்ட ஸ்வீட்டின் ஒரு கிலோ விலையைப் பார்க்கிறார்கள் அல்லது எந்த உணவகங்களில் சோன்பப்டி சிறப்பானது என்பதையும் தேடுகிறார்கள். அதன் அடிப்படையில் ;

இந்த ஆண்டு அக்டோபர் 1 முதல் 29 வரை சராசரியாக 71 மதிப்பெண்களுடன் ரஸ்குல்லா அதிகம் தேடப்பட்ட இனிப்பு என்ற இடத்தையும், குலாப் ஜாமூன் (61), பர்ஃபி (57) மற்றும் காஜு கட்லி (34) ஆகியவை வந்ததாகவும் தரவு காட்டுகிறது. சோன் பாப்டி 23 மதிப்பெண் மட்டுமே பெற்று இறுதி இடத்தில் உள்ளது. இந்த ஆண்டு மட்டுமல்ல. கடந்த ஆண்டும் இதே கொண்டாட்ட காலகட்டத்தில் இதே போக்கு இருந்தது.

எனவே, இனிப்புகளின் விலையை ஒருவர் பார்க்கும்போது, சோன் பப்டி இயற்கையான தேர்வு அல்ல என்பது தெளிவாகிறது.

இதேவேளை உறவினர், நண்பர்கள், அயலவர்களுக்கு என பரிசளிக்கும் இனிப்பு பொருளாக சோன்பப்டி இருக்கின்ற போதும்; அவை தருபவருக்கும் பெருபவருக்கும் இடையிலான உறவின் இணைப்பு கணிக்கப்படுகிறதாம்.

பெரும்பாலான மக்கள் இனிப்பு பரிமாற்றங்களில் முன்னிலை வகிப்பது ரஸ்குல்லா, குலாப் ஜாமூன் , பர்ஃபி, மற்றும் காஜு கட்லி என அடங்குகின்றன. ஆனால் சோன் பாப்டியை அயலவர்களுக்கும்; அன்பானவர்களுக்கும் தனிப்பட்ட பரிசாக வழங்க முடியாத சூழல் உள்ளதாம்; ஏனனில் அதை பெருபவர்கள் குறைத்து மதிக்கப்படுவதாக ஒரு சில இடங்களில் கருதப்படுகிறதாம்.

இவற்றை எல்லாம் விட ஒரு சிலருக்கு குலாப் ஜாமூன் அடங்கிய ஒரு பெட்டி கிடைக்கும் மகிழ்ச்சியின் அளவு சோன்பப்டி பெட்டி தருவதில்லையால். குலாப் ஜாமூன் அல்லது ரசகுல்லா துண்டுகள் சிறியதாகவும், சுவையாகவும், சில சமயங்களில் பூரணங்களுடன் வருவதால், அதிகமாக சாப்பிடலாம் என்பதும் காரணம் காட்டப்படுகிறது.

ஆனால் தனி ஒருவராக சோன்பப்டியை உண்ணுவது ஒரு சிலருக்கு அசௌகரியமாகலாம். மேலும் அவை காய்ந்த பதம் என்பதால் அதற்கு பால் அல்லது தேநீர் போன்றவை தேவைபடலாம் . மேலும், சில சோன்பப்டி வகைகள் முட்கள் நிறைந்தவை, அவை நாக்கை காயப்படுத்தும் சந்தர்ப்பங்களும் உண்டு. இதனால் அதிகமாக எடுத்துக்கொள்ளும் எண்ணமும் வருவதில்லையாம்.

இவை எல்லாம் குறிப்பிட்ட சிலரின் அனுபவங்களிலிருந்து கருத்துக்களாக பதியப்பட்டவையே தவிர தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் ஒவ்வொருக்கும் மாறுபடுகிறது, எனவே அதை எல்லாம் மனதில் கொள்ளாது

இன்னும் நீங்கள் யாருடனும் நெருங்கி பழகவில்லை எனில் சோன்பப்டி இனிப்புடன் உங்கள் உறவை தொடங்கலாம். எல்லாவற்றிற்கும் மேலாக, தீபாவளி என்பது தீபங்கள் மற்றும் பட்டாசுகளின் பண்டிகை மட்டுமல்ல, பரிசுகளின் மகிழ்ச்சியைக் கொண்டாடும் பண்டிகையாகும். ஒருவேளை இது புதியன ஒன்றின் தொடக்கமாக கூட இருக்கலாம்.

மூலம் : theprint.in

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction