free website hit counter

உக்ரைன் இராணுவத்தில் பணியாற்றிய மூன்று இலங்கையர்கள் கொல்லப்பட்டுள்ளனர்

உலகம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
உக்ரைனின் சர்வதேச பிராந்திய பாதுகாப்பு படை மற்றும் உக்ரேனிய வெளிநாட்டு படையணியின் முதல் சிறப்புப் படையின் தளபதியாக இருந்த கப்டன் ரனிஷ் ஹெவகே உட்பட இலங்கை இராணுவத்தின் மூன்று முன்னாள் உறுப்பினர்கள் திங்கட்கிழமை ரஷ்ய இராணுவ தாக்குதலில் கொல்லப்பட்டனர்.
மீட்பு நடவடிக்கையின் போது உக்ரைனில் உள்ள பக்முட் நகரத்தில் கேப்டன் ஹெவகே மற்றும் அவரது சக இரண்டு இலங்கை முன்னாள் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கப்டன் ரனிஷ் ஹெவகேவின் சடலம் புதன்கிழமை (டிச.06) மீட்கப்பட்டதை உக்ரைனின் பாதுகாப்புக்கான சர்வதேச படையணியின் (Ukrainian Foreign Legion) அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதேவேளை, இலங்கை கடற்படையின் முன்னாள் அதிகாரி எம்.எம்.பிரியந்த மற்றும் சிறிலங்கா இராணுவத்தின் சிங்க ரெஜிமென்ட்டின் முன்னாள் உறுப்பினரான ரொட்னி ஜெயசிங்க ஆகியோரின் உடல் இன்னும் மீட்கப்படவில்லை.

போர்க்களத்தில் தனது இராணுவ திறமையால் கேப்டன் ஹெவகே உக்ரைன் வீரர்கள் மத்தியில் 'பல் மருத்துவர்' என்று அழைக்கப்படுகிறார். ரனிஷ் ஹெவகே இலங்கை இராணுவத்தின் 1வது கொமாண்டோ படைப்பிரிவில் கேப்டனாக பணியாற்றி 2018 இல் ஓய்வு பெற்றார். ராணுவத்தில் இருந்து விலகிய அவர், துபாயில் உள்ள தனியார் நிறுவனத்தில் செயல் அதிகாரியாக சேர்ந்தார்.

அதன்பின், மார்ச் 2022 இல், அவர் துபாயிலிருந்து உக்ரைனுக்கு வந்து உக்ரைனின் பாதுகாப்புக்கான சர்வதேச படையணியில் சேர்ந்தார்.

கப்டன் ஹெவாஜின் இறுதிச் சடங்குகளை முழு ராணுவ மரியாதையுடன் செய்ய உக்ரைன் அரசு தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. போர்க்களத்தில் துணிச்சலுடன் செயல்பட்டதற்காக உக்ரைன் அதிபரால் கேப்டன் ஹெவகேவுக்கு பதவி உயர்வு வழங்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction