நான்கு விண்வெளி வீரர்களை ஏற்றிக் கொண்டு பூமிக்குத் திரும்பிய ஸ்பேஸ்எக்ஸ் க்ரூ- 9 டிராகன் காப்ஸ்யூல், புளோரிடா கடலில் வெற்றிகரமாக இறங்கியது.
கடலில் பத்திரமாக இறங்கிய டிராகன் காப்ஸ்யூலில் இருந்து, ஸ்பேஸ்எக்ஸ் மீட்புக் குழுவினர் ஒவ்வொரு விண்வெளிவீரர்களையும் பத்திரமாக மீட்டனர். டிராகன் காப்ஸ்யூலில் இருந்து மூன்றாவதாக வெளியியே வந்த சுனிதா வில்லியம்ஸ், ஒற்சாகமாகக் கைகளை அசைத்தவாறே சென்றார்.
சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் நீண்ட காத்திருப்புக்குப் பிறகு பாதுகாப்பாக பூமிக்குத் திரும்பினர்
ஜூன் 2024 இல் போயிங்கின் ஸ்டார்லைனரில் ஒரு குறுகிய சோதனைக்காக விண்வெளி நிலையத்திற்குச் சென்ற, வில்மோர் மற்றும் வில்லியம்ஸ் தொழில்நுட்பச் சிக்கல்கள் காரணமாக, உடனடியாகப் பூமிக்குத் திரும்ப முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் அவர்கள் விண்வெளியில் 286 நாட்களைக் கழிக்க வேண்டியிருந்தது.
அவர்கள் தங்கியிருப்பது நீண்டதாக இருந்தாலும், இவர்களுக்கு முன்னதாக, அமெரிக்க விண்வெளி வீரர் ஃபிராங்க் ரூபியோ 371 நாட்களும், ரஷ்ய விண்வெளி வீரர் வலேரி பாலியாகோவ் மிர் விண்வெளி நிலையத்தில் 437 நாட்களும் வியக்கத்தக்க வகையில் கழித்துள்ளனர். ஆனால் விண்வெளியில் அதி கூடிய நாட்கள் கழித்த பெண் எனும் பெருமையை சுனிதா வில்லியம்ஸ் பெறுகின்றார்.
இவர் அமெரிக்கராயினும், இவரது பெற்றோர்கள் இந்தியாவின் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், சுனிதாவின் சாதனையும், வெற்றிகரமான திரும்புகையும் இந்தியாவில் பெரிதும் கொண்டாடப்பட்டது. இந்த வெற்றிகரமான மீட்பின் இறுதி நிமிடங்கள் உலகெங்கிலும் ஆவலாக எதிர்பார்க்கப்பட்டன. அந்த இறுதி நிமிடங்கள் நாநாவினால் அழகாகக் காட்சிப்படுத்தப்பட்டு, நேரலையாகவும் ஒளிபரப்பட்டது.