பாதுகாப்பு கருதி ‘அஸ்ட்ரா 6.1’ மாடலின் வெளியீட்டை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக ஓபன்ஏஐ நிறுவனம் அறிவித்துள்ளது.
உலகின் முன்னணி ஏஐ நிறுவனங்களின் மாடல்கள் அனைத்தையும்விட அதிநவீன திறன் கொண்ட ஏஐ மாடலாக ‘அஸ்ட்ரா 6.1’ மாடலை ஓபன்ஏஐ நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்தது.
இது பயனர்களின் கேள்விகளுக்குப் பதிலளிப்பதோடு மட்டுமின்றி, மனிதர்களைப் போலவே தானாகவே இயங்கி பல சிக்கலான பணிகளை செய்யும் திறன் கொண்டதாக தெரிவிக்கப்பட்டது.
ஆன்லைன் படிவங்களை நிரப்புதல், அட்டவணைகளை நிர்வகித்தல், தரவுகளை பகுப்பாய்வு செய்தல், வெப் டிசைன், சட்ட ஆவணங்கள் தயாரித்தல், வருமான வரி கணக்கை தாக்கல் செய்வது என பல விஷயங்களை செய்து முடிக்கும் வல்லமையுடன் உருவாக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்த மாடலின் சோதனையின்போது, சோதனையின்போது அமெரிக்க அரசின் கல்வி, வா்த்தகத் துறை உள்ளிட்டவையின் இணையதளங்களை தன்னிச்சையாக ஊடுருவ முயன்றுள்ளன. இதுகுறித்து அமெரிக்க அரசுக்குத் தகவல் தெரிவித்துள்ளதாகவும் ஓபன்ஏஐ விளக்கம் அளித்துள்ளது.
இதேபோல், ஆஸ்திரேலிய அரசின் சுகாதாரத் துறையின் (மெடிகோ்) இணையதளத்தை ஓபன்ஏஐ ஏஜென்ட் ஊடுருவி, கோப்புகளைச் சட்டவிரோதமாக அணுகியதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், பாதுகாப்பு கவலை காரணமாக ‘அஸ்ட்ரா 6.1’ மாடலின் வெளியீட்டை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக ஓபன்ஏஐ நிறுவனம் அறிவித்துள்ளது.
AI-யை உருவாக்குபவர்களே அஞ்சத் தொடங்கினால்...?
இதுதொடர்பாக ஓபன்ஏஐ நிறுவனத்தின் பாதுகாப்பு அமைப்புகளுக்கான தலைவர் சாச்சி ஜெயின் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
“அஸ்ட்ரா 6.1 முந்தை மாடல்களைவிடச் சில அம்சங்களில் மேம்பட்டதாக இருந்தாலும், அதன் செயல்பாட்டு வரம்பு மற்றும் அங்கீகாரத்திற்குள் செயல்படுவது, அத்துடன் தான் மேற்கொண்ட பணிகள் குறித்த தகவல்களைப் பயனருக்குத் தெரிவிக்கும் விதம் ஆகியவற்றில் அது எதிர்பார்த்த தரத்தை முழுமையாக எட்டவில்லை.
நிறுவனத்திற்குள்ளாகவோ அல்லது பயனர்களுக்கு அதை வழங்கும்போதோ, எங்கள் ஏஐ பாதுகாப்பானதாக இருப்பதை உறுதிசெய்ய விரும்புகிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வாரம் அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்ட சீன அதிபர் ஷி ஜின்பிங், அதிபர் டொனால்ட் டிரம்பைச் சந்தித்தார். அப்போது செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்ப விவகாரங்களைக் கையாள புதிய பேச்சுக் குழுவை அமைக்க இருவரும் ஒப்புக்கொண்டது குறிப்பிடத்தக்கது.