எரிபொருள் பற்றாக்குறை காரணமாக நாட்டின் இரண்டு பெரிய மின் நிலையங்கள் மூடப்பட்டுள்ளதால் மின்சாரம் இன்றி லெபனான் இருளில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
லெபானன் நாட்டில் உள்ள டீர் அம்மர் மற்றும் ஜஹ்ரானி மின் உற்பத்தி நிலையங்கள் எரிபொருள் இல்லாததால் செயல்படுவதை முற்றிலும் நிறுத்தியிருப்பது ஆங்காங்கே எதிர்ப்புகளைத் தூண்டியுள்ளது.
இன்று நண்பகலில் இருந்து நிறுத்தப்பட்ட மின் நிலைய செயல்பாடு பல நாட்களுக்கு மறுதொடக்கம் செய்ய வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.
கடந்த 18 மாதங்களாக லெபனான் கடுமையான பொருளாதார நெருக்கடியைச் சந்தித்துள்ளது, இது எரிபொருள் பற்றாக்குறையின் மத்தியில் மோசமாகியுள்ளது.