கியூபா நாட்டில் சிறு மற்றும் நடுத்தர தனியார் வணிகங்களை அந்நாட்டின் அரசாங்கம் இயங்குவதற்கு அனுமதி அளித்துள்ளது.
இது கடந்த மாதம் கம்யூனிஸ்ட அரசுக்கு எதிராக நடந்த எதிர்ப்பு போரட்டங்களை அடுத்து சாத்தியமாகியுள்ளது.
கியூபாவில் கடந்த ஜூலை மாதம் கடுமையான பொருளாதார நெருக்கடியின் மத்தியில் ஆயிரக்கணக்கானோரால் பொருளாதார சீரழிவு குறித்து புகார் செய்யப்பட்டு அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடந்தன. ஏற்கனவே பத்தாண்டுகளாக நடந்துவரும் இப்போராட்டம் கொரோனா பாதிப்பு காரணமாக நாடாளவிய ரீதியில் பல போராட்டங்கள் வெடித்தன.
இந்நிலையில் கியூபா தனது பொருளாதார மாதிரியைப் புதுப்பிக்க உறுதியான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக ஜனாதிபதி கூறியுள்ளதுடன் அந்நாட்டின் சிறு மற்றும் நடுத்தர தனியார் வணிகங்களை சட்டப்பூர்வமாக்கி இருப்பதாக அறிவித்துள்ளார். மேலும் புதிய விதிகளின்படி, 100 ஊழியர்கள் வரை உள்ள நிறுவனங்கள் அனுமதிக்கப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.