free website hit counter

ஆக்கஸ் நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தம் ஏற்படுத்தியிருக்கும் சர்ச்சை

உலகம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

66 பில்லியன் டாலர் நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தத்தை கைவிடுவதற்கான ஆஸ்திரேலியாவின் நடவடிக்கை மேற்கத்திய நட்பு நாடுகளுக்கு இடையே முன்னோடியில்லாத இராஜதந்திர சண்டையாக மாறியுள்ளது.

அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் இணைந்து இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் சீனாவை எதிர்க்கொள்ள ஆக்கஸ் என்ற புதிய பாதுகாப்பு கூட்டமைப்பை உருவாக்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் ஒன்றை ஆஸ்திரேலியாவிற்கு வழங்க பிரிட்டனும் அமெரிக்காவும் முன்வந்துள்ளன. ஆஸ்திரேலியாவின் படை பலத்தை அதிகரிக்கும் நோக்கில் இந்த அணுசக்தி நீர் மூழ்கி கப்பல் ஒப்பந்தத்தில் சர்ச்சை நிலவி வருகிறது.

இதற்காக பிரான்ஸ் தயாரிப்பான டீசல்-மின்சார நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்குவதற்காக 50 பில்லியன் யூரோக்கள் (59 பில்லியன் டாலர்) மதிப்புள்ள ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக ஆஸ்திரேலியா அறிவித்தது. 

இதனால் ஆஸ்திரேலியா அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்க அவுக்கஸ் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு பிரான்ஸ் இந்த செயல்பாட்டால் ஆக்கஸ் தொடர்பான பிரிட்டனின் பாதுகாப்பு பேச்சுவார்த்தையில் இருந்து பிரான்ஸ் வெளியேறுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும் பில்லியன் கணக்கான யூரோக்களுக்கு பொருளாதார சேதத்துடன், ஆஸ்திரேலியா மற்றும் அதன் பங்காளிகள் இந்த விஷயத்தை கையாண்ட விதத்தை பிரான்ஸ் வெறுப்பதாகக் கூறியது.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு அணுசக்தி நீர் மூழ்கி கப்பல் வழங்கும் அமெரிக்காவின் முடிவிற்கு வடகொரிய எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதன் தொடர்பாக வடகொரியாவின் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவிக்கையில் ஆசிய பசுபிக் பகுதியில் பாதுகாப்பு நிலையை கடுமையாக பாதிக்கும் இந்த மூன்று நாடுகளுக்கிடையேயான ஒப்பந்தம் ஆபத்தானது. தங்களின் பாதுகாப்புற்ற்கு அச்சுறுத்தல் ஏற்படும் பட்சத்தில் இந்த ஒப்பந்தத்திற்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் மேலும் தெரிவித்துள்ளது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula