free website hit counter

கனடாவில் முஸ்லிம் குடும்பத்தினர் மீது மதவெறித் தாக்குதல்! : 4 பேர் பலி

உலகம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

கனடாவின் ஒண்டாரியோ மாகாணத்தின் தெற்கே ஒரு மர்ம நபர் தான் ஓட்டி வந்த டிரக் வண்டியினை வேண்டுமென்றே ஒரு முஸ்லிம் குடும்பத்தினர் மீது மோதச் செய்து நடத்திய தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியாகியுள்ளனர்.

இது முன்பே திட்டமிடப் பட்ட ஒரு மதவெறித் தாக்குதல் என திங்கட்கிழமை போலிசார் தெரிவித்துள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை மாலை லண்டன் என்ற கனேடிய நகரில் இடம்பெற்ற இத்தாக்குதலின் பின்னர் தப்பிச் சென்ற 20 வயதான குறித்த மர்ம நபர் 7 கிலோ மீட்டர் தொலைவில் போலிசாரால் கைது செய்யப் பட்டுள்ளார். இந்த மதவெறித் தாக்குதலில், 74 வயதான பெண் ஒருவர், 46 வயதான ஆண், 44 வயதான பெண் மற்றும் 15 வயதே ஆன சிறுமி ஆகியோர் கொல்லப் பட்டுள்ளனர்.

மேலும் காயமடைந்த 9 வயதான சிறுவன் மருத்துவ சிகிச்சையின் பின் தேறி வருகின்றான். முஸ்லிம்கள் மீது திட்டமிடப் பட்ட இந்த மதவெறித் தாக்குதலுக்கு சர்வதேசமும் பல இஸ்லாமிய அமைப்புக்களும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இன்னுமொரு நடப்பு உலகச் செய்தி -

சமீபத்தில் அமெரிக்க அவுஸ்திரேலிய போலிசார் கூட்டாக இணைந்து நடத்திய ஆப்பரேஷனில் 18 நாடுகளைச் சேர்ந்த நூற்றுக் கணக்கான நபர்கள் கைது செய்யப் பட்டுள்ளனர். உலகளாவிய போதைப் பொருள் வர்த்தகத்தில் தொடர்புடைய இக்குற்றவாளிகள் பயன்படுத்திய மாபைல் செயலி ஒன்றில் ஊடுருவி சுமார் சுமார் மில்லியன் கணக்கான தகவல்களை வேவு பார்த்ததன் பின்னே இக்கைது நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டதாக அவுஸ்திரேலிய போலிசார் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளனர்.

அவுஸ்திரேலிய போலிஸும், அமெரிக்க புலனாய்வு அமைப்பான FBI உம் இணைந்து அவுஸ்திரேலியா, ஆசியா, தென்னமெரிக்கா மற்றும் மத்திய கிழக்கைச் சேர்ந்த 224 குற்றவாளிகளைக் கைது செய்துள்ளனர். நியூசிலாந்தும் 35 குற்றவாளிகளைக் கைது செய்துள்ளது. உலகளவில் இந்தக் கைது நடவடிக்கை சட்ட விரோத போதைப் பொருள் வர்த்தகத்தை தடுத்து நிறுத்துவதில் முக்கிய மைல்கல் என அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் தெரிவித்துள்ளார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula