free website hit counter

3 ஆக்ஸியம்-4 விண்வெளி வீரர்கள் பூமிக்குத் திரும்பினர்

உலகம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்த முதல் இந்தியரான சுபன்ஷு சுக்லா, உட்பட ஆக்ஸியம்-4 விண்வெளி வீரர்களும் பூமிக்குத் பாதுகாப்பாகத் திரும்பினார்.

விண்வெளி வீரர்களை ஏற்றிச் சென்ற ஸ்பேஸ்எக்ஸின் டிராகன் விண்கலம் "கிரேஸ்", கலிபோர்னியா கடற்கரையில் பசிபிக் பெருங்கடலில் இந்திய நேரப்படி பிற்பகல் 3.01 மணிக்கு (4:31 AM CT)  விழுந்தது.

வரலாற்று சிறப்புமிக்க விண்வெளிப் பயணத்திற்குப் பிறகு, 39 வயதான இந்திய விமானப்படை அதிகாரியும் சோதனை விமானியுமான குரூப் கேப்டன் சுக்லா, பெக்கி விட்சன் (அமெரிக்கா), ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி-விஸ்னீவ்ஸ்கி (போலந்து) மற்றும் திபோர் கபு (ஹங்கேரி) ஆகியோர் தரைக்குத் திரும்பினர்.

ISS இல் இரண்டு வாரங்களுக்கும் மேலாக தங்கியிருந்த காலத்தில், சுக்லா 310 க்கும் மேற்பட்ட சுற்றுப்பாதைகளின் மூலம், 1.3 கோடி கிலோமீட்டர்களைக் கடந்து சென்றார்.இது பூமிக்கும் சந்திரனுக்கும் இடையிலான தூரத்தை விட 33 மடங்கு பயணிப்பதற்கு சமம். தங்கியிருந்த இக் காலத்தில், ஆய்வகத்திலிருந்து 300 க்கும் மேற்பட்ட சூரிய உதயங்கள் மற்றும் சூரிய அஸ்தமனங்களையும் குழுவினர் கண்டனர்.

இதற்கிடையில், விண்வெளி வீரர் சுக்லா ஏழு மைக்ரோகிராவிட்டி சோதனைகள் மற்றும் பிற திட்டமிடப்பட்ட செயல்பாடுகளையும் முடித்து, பயணத்தில் ஒரு மைல்கல்லை எட்டியுள்ளார் என்று இஸ்ரோ திங்களன்று தெரிவித்திருந்தமை குறிப்பிட்டது.

 

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula