free website hit counter

20 ஆண்டு கால நிறைவில் 9/11 தாக்குதல் : ஒற்றுமைக்கு அழைப்பு விடுக்கும் ஜோ பிடன்

உலகம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் 2001 செப்டம்பர் 11; தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூரும் போது ஒற்றுமையை வலியுறுத்தினார்.

அமெரிக்காவில் கடந்த 2001 செப் 11 அன்று நடத்தப்பட்ட இரட்டைக்கட்டிட தாக்குதலின் 20 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நினைவேந்தல் நிகழ்வுகள் அங்கு நடைபெறுகின்றன. இதன்போது அமெரிக்க அதிபர் ஜோ பிடன்ன் உயிரிழந்த 2,977 பேருக்குஅஞ்சலி செலுத்தினார்.

தாக்குதல்களுக்குப் பதிலளித்த அவசரப் பணியாளர்களைப் பற்றிப் பேசிய பிடென், "நிமிடங்கள், மணிநேரங்கள், மாதங்கள் மற்றும் ஆண்டுகளுக்குப் பிறகு தங்கள் உயிரைக் கொடுத்த அனைவரையும் நாங்கள் மதிக்கிறோம்."

"எவ்வளவு நேரம் கடந்துவிட்டாலும், இந்த நினைவுகள் சில வினாடிகளுக்கு முன்பு உங்களுக்கு செய்தி கிடைத்தது போல் எல்லாவற்றையும் வேதனையுடன் மீண்டும் கொண்டுவருகிறது" என்றார்.

"மனித இயல்பின் இருண்ட சக்திகள் - முஸ்லிம் அமெரிக்கர்களுக்கு எதிரான பயம் மற்றும் கோபம், மனக்கசப்பு மற்றும் வன்முறை" ஆகியவற்றை அவர் ஒப்புக்கொண்டார், ஆனால் ஒற்றுமை அமெரிக்காவின் "மிகப்பெரிய பலம்" என்று கூறினார்.

"ஒற்றுமை என்பது ஒருபோதும் உடைக்கப்பட முடியாத ஒன்று என்பதை நாங்கள் கற்றுக்கொண்டோம்," என்று அவர் மேலும் கூறினார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction