சுற்றுலாத்துறையின் வருவாயை அதிகரிக்கும் முயற்சியில், வரலாற்று சிறப்புமிக்க பாறை கோட்டையான சிகிரியாவிற்கு சந்திரன் ஒளிரும் இரவுகளில் பார்வையாளர்களை அனுமதிக்க சுற்றுலா அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
ஒரு மாதத்தில் ஐந்து நாட்கள்- பௌர்ணமி தினம், பௌர்ணமி தினத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்னும், அதற்குப் பின்னரும் இரண்டு நாட்களுக்கு மக்களைப் பார்வையிட அமைச்சகம் அனுமதிக்கும்.
தற்போது, காலை 6.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இந்த நிகழ்ச்சிக்கு ‘சிகிரியா இன் மூன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.