2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களில் உள்ளூர் அரசியல் சக்திகள் ஈடுபட்டதாக 53% க்கும் அதிகமான இலங்கை மக்கள் நம்புகின்றனர் என்று சிண்டிகேட்டட் சர்வேய்ஸ் மூலம் ஒக்டோபர் மாதம் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கணக்கெடுக்கப்பட்டவர்களுக்கு, இத்தாக்குதல்களுக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பது குறித்து நாட்டில் நிலவும் பின்வரும் மூன்று பார்வைகள் வழங்கப்பட்டு, அவர்கள் மிகவும் ஒப்புக்கொண்ட ஒன்றைத் தேர்ந்தெடுக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
1) ஆபத்தான வெளிநாட்டு சக்திகளுடன் இணைந்து செயற்படும் இலங்கை தீவிரவாதிகளால் மேற்கொள்ளப்பட்டது.
2) உள்ளூர் அரசியல் சக்திகளுடன் இணைந்து செயற்படும் இலங்கை தீவிரவாதிகளால் இது மேற்கொள்ளப்பட்டது.
3) உள்ளூர் அரசியல் சக்திகளுடனும் ஆபத்தான வெளிநாட்டு சக்திகளுடனும் இணைந்து செயற்பட்ட இலங்கை தீவிரவாதிகளால் இது மேற்கொள்ளப்பட்டது.
இதில் 53% உள்ளூர் அரசியல் சக்திகள் சம்பந்தப்பட்டிருப்பதாக நம்பினர். 30% பேர் இரண்டாவது பதிலைத் தேர்ந்தெடுத்த நிலையில் 23% பேர் மூன்றாவது பதிலைத் தேர்ந்தெடுத்தனர். உள்ளூர் அரசியல் சக்திகளின் தலையீடு இல்லாமல் இது மேற்கொள்ளப்பட்டதாக 8% மட்டுமே நம்பினர் (முதல் பதில்). மேலும் 39%, தங்களுக்கு எந்த கருத்தும் இல்லை அல்லது கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர்.
2023 அக்டோபரில் நடத்தப்பட்ட இவ்வாக்கெடுப்பு 1,029 இலங்கை பெரியவர்களிடமிருந்து நாடளாவிய, தேசிய பிரதிநிதித்துவ மாதிரி பதில்களின் அடிப்படையில் நடத்தப்பட்டது.