தேசிய நுகர்வோர் விலைக் குறியீட்டால் (NCPI) அளவிடப்படும் ஒட்டுமொத்த பணவீக்க விகிதம், 2024 ஆகஸ்டில் 1.1% ஆக இருந்து செப்டம்பர் 2024 இல் -0.2% ஆகக் குறைந்துள்ளது என்று மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் திணைக்களம் வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், ஆகஸ்ட் மாதத்தில் 2.3% ஆக இருந்த உணவுப் பணவீக்கம் செப்டம்பர் மாதத்தில் 0.5% ஆகக் குறைந்துள்ளது.
செப்டம்பர் 2024 மாதங்களுக்கான அனைத்து பொருட்களுக்கான NCPI 203.1 ஆகும். 204.1 ஆக இருந்த ஆகஸ்ட் 2024 உடன் ஒப்பிடும்போது 1.0 இன்டெக்ஸ் புள்ளிகள் அல்லது 0.48 சதவீதம் குறைவு. இந்த குறைவு "சந்தை கூடையில்" செலவின மதிப்பில் ரூ.500.25 குறைவதைக் குறிக்கிறது.