கண்டி தேசிய வைத்தியசாலையில் நேற்று (23) கொவிட்-19 என சந்தேகிக்கப்படும் மரணம் பதிவாகியுள்ளது.
நபர் ஆரம்பத்தில் மூச்சு விடுவதில் சிரமம் மற்றும் நுரையீரல் தொற்றுடன் அனுமதிக்கப்பட்டார். மேலும் பிரேத பரிசோதனை PCR பரிசோதனையில் அவருக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கண்டி தேசிய வைத்தியசாலையின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Covid-19 தொற்றுநோய் முடிவுக்கு வந்ததில் இருந்து ஒரு கணிசமான அமைதியான காலத்திற்குப் பிறகு இந்த சம்பவம் அறிவிக்கப்பட்டதால் பெரும் அவதானத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில், நோய்த்தடுப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவத் துறையின் தலைவர் பேராசிரியர் சந்திம ஜீவந்தர, இலங்கையில் இன்ஃப்ளூயன்ஸா போன்ற நோய்கள் அதிகரித்து வருவதால், ஜே.என்.1 - ஒரு ஓமிக்ரான் துணைப் பரம்பரை வைரஸ் சமூகத்தில் காணப்படலாம் என்று சமீபத்தில் கூறினார்.