மேஜர் பதவிக்குக் கீழே உள்ள அனைத்துப் பணியாளர்களும் தங்கள் கடவுச்சீட்டுகளை அந்தந்தப் படைப்பிரிவுகளிடம் ஒப்படைக்குமாறு இலங்கை இராணுவம் உத்தரவிட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
நிர்வாக விவகாரம் தொடர்பாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் வருண கமகே மேலும் தெரிவித்தார்.
இருப்பினும், சம்பந்தப்பட்ட துறைகளுக்குத் தெரிவிப்பதன் மூலம் தனிப்பட்ட நோக்கங்களுக்காக கடவுச்சீட்டுகளை மீண்டும் பெறலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.