ஆடைத் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பேரூந்து ஒன்று நேற்று ஹொரவ்பொத்தானை அளுத் ஓயாவில் வேனில் வந்த சிலரால் சாரதியுடன் கடத்திச் செல்லப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், கல் ஓயா பொலிஸார் சம்பவம் தொடர்பில் ஆறு சந்தேக நபர்களை கைது செய்ததுடன் கடத்தப்பட்ட பேருந்தை சாரதியுடன் கண்டுபிடித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 37 மற்றும் 50 வயதுடைய பிங்கிரிய மற்றும் வீரம்புகெதர பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் ஹொரவ்பொத்தானை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். சந்தேகநபர்கள் இன்று கெபித்திகொல்லாவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
 
																						 
														 
     
     
    
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    