இலங்கை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி, ஷிராந்தி ராஜபக்ச, முன் ஜாமீன் கோரும் மனுவொன்றை நீதிமன்றில் தாக்கல் செய்துள்ளார்.
"சிரிலிய சவிய" கணக்கு தொடர்பான விசாரணை ஒன்றில், தாம் கைது செய்யப்படலாம் எனக் கருதும் அவர், அதனைத் தடுக்கும் உத்தரவு கோரி முன்பிணை முன் ஜாமீன் மனுவொன்றை, தனது சட்டத்தரணிகள் ஊடாக மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்துள்ளதாகத் தெரிய வருகிறது.
ஷிராந்தி ராஜபக்ச, வைத்திய சிகிச்சைக்காக, அண்மையில் சிங்கப்பூர் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.