free website hit counter

யாழில் கடும் வறட்சி

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
யாழில் கடும் வறட்சி இலட்சக்கணக்கான குடும்பங்கள் பாதிப்பு
தற்போதைய நிலை தொடர்ந்து நீடிக்கும் பட்சத்தில் குடிநீர்த் தேவையுடைய குடும்பங்களின் தொகை அதிகரிக்கக்கூடும் எனவும் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படல் வேண்டுமெனவும் அண்மையில் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் பிரதேச செயலாளர்களால் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இதன்போது, நெடுந்தீவு உட்பட தங்களால் நீர் வழங்கல் செய்யப்படும் பிரதேசங்களிற்குக் குடிநீர்த் தட்டுப்பாட்டைச் சமாளிக்கக் கூடிய வகையில் நீர் வழங்கலை மேற்கொள்ள முடியுமெனவும் தற்போது மாவட்டத்தில் அவ்வாறான சேவைகள் 18 குடிநீர் மூலங்கள் மூலமாகச் செயற்படுவதாகவும் நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, எதிர்வரும் கால வறட்சியினை கருத்திற் கொண்டு நீர்ப் பாவனையில் விரயத்தைத் தவிர்த்து சிக்கனமாக நீரைப் பாவிக்க பொது மக்களுக்கு அறிவுறுத்த வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், யாழ்ப்பாண நகரப் பகுதியிலுள்ள இயற்கையான குளங்கள் மற்றும் கேணிகளைத் தனியார் ஆக்கிரமிப்புகளில் இருந்து பாதுகாப்பதற்கு அந்த நீர் நிலைகளுக்குப் பொறுப்பான திணைக்களங்களால் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டுமென யாழ். மாவட்டச் செயலாளரினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அண்மையில் யாழ்ப்பாண மாவட்ட செயலக இடம்பெற்ற வறட்சி தொடர்பான கலந்துரையாடலில் குறித்த விடயம் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.

யாழ். மாநகர சபைக்கு உட்பட்ட தூர்வாரப்படாத குளங்கள் மற்றும் கேணிகளை மாநகர சபை பொறியியலாளரின் மேற்பார்வையின் கீழ் பொது அமைப்புகள் மற்றும் தனியார் மூலமாகத் தூர்வாரி சுத்தப்படுத்த முடியுமெனவும் அதற்கு சில நிறுவனங்கள் தாமாகவே முன்வருவார்கள் என யாழ்ப்பாண பிரதேச செயலாளரினால் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் மாவட்டத்திலுள்ள ஏனைய பிரதேச செயலக பிரிவுகளிலுள்ள இவ்வாறான கேணிகளையும் நீர் நிலைகளையும் துப்பரவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction