நாட்டில் பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்யும் வகையில் சுற்றுச்சூழல் அமைச்சரால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
• ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் ஸ்ட்ராக்கள் மற்றும் கிளறிகள் (straws and stirrers)
• பிளாஸ்டிக் யோகர்ட் கரண்டிகள், தட்டுகள், கோப்பைகள் (தயிர் கோப்பைகள் தவிர), கத்திகள், கரண்டிகள் மற்றும் முட்கரண்டிகள்
• பிளாஸ்டிக் மலர் மாலைகள்
• பிளாஸ்டிக் இடியப்ப தட்டுகள்
ஆகஸ்ட் 30, 2021 அன்று, நாட்டில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்வதற்கான அனுமதி கோரும் முன்மொழிவை அமைச்சர்கள் அமைச்சரவை கவனத்தில் எடுத்தது.
இதையடுத்து, இது குறித்து ஆய்வு செய்து, தேவையான பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை சமர்ப்பிக்க, நிபுணர்கள் குழு நியமிக்கப்பட்டது.
நிபுணர்கள் குழுவின் பரிந்துரையின்படி, மேற்குறிப்பிட்ட பிளாஸ்டிக் பொருட்களை நாட்டில் தடை செய்ய அமைச்சர்கள் அமைச்சரவை முடிவு செய்தது.