நிலவும் மோசமான வானிலை காரணமாக, கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் நாளை (ஜனவரி 20) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் தெரிவித்தார்.
இதற்கிடையில், இந்த நாட்களில் மாகாணத்தில் உள்ள பள்ளிகளில் தேர்வுகள் நடைபெறுவதால், நாளை (20) நடைபெறவிருந்த தேர்வு பாடங்கள் சனிக்கிழமை (ஜனவரி 25) நடைபெறும்.