free website hit counter

எந்த தேர்தலை முதலில் அறிவிப்பது என்ற குழப்பத்தில் ரணில்: AKD

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
ஏனைய கட்சிகளை விட தேசிய மக்கள் சக்திக்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக அனைத்து ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ள நிலையில், ஜனாதிபதித் தேர்தலையோ அல்லது பொதுத் தேர்தலையோ முதலில் அறிவிப்பதா என்ற குழப்பத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இருப்பதாக தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
காலி மாவட்ட மகளீர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், இதற்கு முன்னர் ஜனாதிபதி அல்லது பொதுத் தேர்தலை அறிவிப்பதில் ஆட்சியாளர்கள் எந்த தயக்கமும் கொண்டிருக்கவில்லை, ஆனால் தற்போது எந்த தேர்தலை முதலில் அறிவிப்பது என்பதில் ஆட்சியாளர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

இரண்டு தேர்தல்களில் எதையும் சந்திக்க NPP தயாராக உள்ளது என்றார்.

நாட்டை புதிய திசையில் கொண்டு செல்லக்கூடிய புதிய குழுவிற்கு அதிகாரம் மாற்றப்பட வேண்டும் என திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

“போட்டி குழுக்கள் கூட NPP அரசாங்கத்தை அமைக்க முடியும் என்பதில் உறுதியாக உள்ளன. அனைத்து போட்டி அரசியல் கூட்டங்களிலும் NPP மற்றும் JVP தலைப்பாக இருக்கிறது. JVPயால் ஒருபோதும் அரசாங்கத்தை அமைக்க முடியாது என அவர்கள் முன்னர் கூறினர். இப்போது, NPP யால் அரசாங்கத்தை நடத்த முடியாது என்று சொல்லத் தொடங்கியுள்ளனர்.” என்றார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula