புனித திருத்தந்தை பிரான்சிஸ் மறைவுக்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இரங்கல் தெரிவித்துள்ளார்.
திருத்தந்தை பிரான்சிஸ் இன்று காலை தனது 88வது வயதில் காலமானார்.
திருத்தந்தை பிரான்சிஸ் பல வாரங்களாக சுவாச நோயால் பாதிக்கப்பட்டு, பிப்ரவரி மாதம் அகோஸ்டினோ ஜெமெல்லி பாலிகிளினிக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மார்ச் மாதம் அவர் வத்திக்கானுக்குத் திரும்பிய போதிலும், அவரது உடல்நிலை படிப்படியாக மோசமடைந்தது.
‘எக்ஸ்’ (முன்னர் ட்விட்டர்) இல் ஒரு செய்தியை வெளியிட்ட ஜனாதிபதி திசாநாயக்க, அனைத்து இலங்கையர்களின் சார்பாகவும் தனது இரங்கலைத் தெரிவித்து, அமைதி, இரக்கம் மற்றும் மனிதநேயம் மீதான திருத்தந்தையின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு உலகில் ஒரு அழியாத அடையாளத்தை ஏற்படுத்தியுள்ளது என்றார்.
"கருணை, நீதி மற்றும் மதங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தின் அவரது மரபு எதிர்கால தலைமுறையினருக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கட்டும்” என்று ஜனாதிபதி மேலும் கூறினார்.