free website hit counter

இலங்கை ஜனாதிபதிக்கு ரஷ்ய அதிபர் புடின் வாழ்த்து !

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இலங்கைக்கான ரஷ்யத் தூதுவர் லெவன் எஸ். ஜகார்யன் (Levan S. Dzhagaryan) இன்று (01) முற்பகல் இலங்கை  ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் புதிதாக தெரிவான ஜனாதிபதி திசாநாயக்கவிற்கு தூதுவர் எஸ். ஜகார்யன் தனது வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் தனிப்பட்ட வாழ்த்துச் செய்தியொன்றையும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கு வழங்கினார்.

ஜனாதிபதி அநுர திசாநாயக்கவின் தலைமையில் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் மேலும் வலுவடையும் என எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி புடின் தனது செய்தியில் குறிப்பிட்டிருந்தார்.

இலங்கைக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான நீண்ட கால இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடலில் விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், இராஜதந்திர உறவுகளை பரஸ்பரம் மேம்படுத்துவதற்கு இரு தரப்பினதும் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துவதுடன், வர்த்தகம், முதலீடு, கலாசாரம் மற்றும் கல்வி போன்ற முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் இரு தரப்பினரும் வலியுறுத்தினர்.

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: