free website hit counter

சுகாதார அமைச்சின் புதிய செயலாளராக பாலித குணரத்ன மகிபால பதவியேற்றார்

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
இன்று சுகாதார அமைச்சின் செயலாளராகக் கடமையேற்றுள்ளார்.
சுகாதார அமைச்சின் புதிய செயலாளராக விசேட வைத்திய நிபுணர் பாலித குணரத்ன மகிபால பதவியேற்றுள்ளார்.

சுகாதார அமைச்சில் இன்று (20.11.2023) காலை 07 மணியளவில் பாலித குணரத்ன மகிபால புதிய செயலாளராகப் பதவியேற்றுக்கொண்டுள்ளார்.

இவர் சமுதாய மருத்துவ இளங்கலைப் பட்டம், வணிக முகாமைத்துவ முதுகலைப் பட்டம் மற்றும் மருத்துவ நிர்வாக முதுகலைமாணிப் பட்டம் உள்ளிட்ட பல்வேறு பட்டமேற்படிப்புகளை நிறைவு செய்துள்ள வைத்தியர் மகிபால பல்வேறு சர்வதேச சுகாதார சேவை அமைப்புகளில் அங்கத்தவராகவும் இருந்துள்ளார்.

கொழும்பு ஆனந்தக் கல்லூரி மற்றும் பேராதனைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் பழைய மாணவரான இவர் மார்கழி மாதம் 2012 ஆம் ஆண்டிலிருந்து தை மாதம் 2017ஆம் ஆண்டுவரை இலங்கையின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமாகத் திறம்படக் கடமையாற்றியிருந்தார்.

அத்துடன் 2017ம் ஆண்டில் உலக சுகாதார நிறுவனத்தின் தென்கிழக்காசியப் பிரிவில் தொற்றாநோய் அலகின் இணைப்பாளராக கடமையேற்ற வைத்தியர் பாலித மகிபால சித்திரை மாதம் 2019ம் ஆண்டிலிருந்து கடந்த வாரம் வரை உலக சுகாதார நிறுவனத்தின் பாகிஸ்தான் வதிவிடப் பிரதிநிதியாகக் கடமையாற்றியிருந்தார்.

இந்நிலையில், தற்போதைய அவல நிலையிலிருந்து நாட்டின் பொதுச் சுகாதரத்துறையினை மீட்டெடுப்பதற்கு இவரே தகுதியானவர் எனப் பலரும் பரிந்துரைத்தமைக்கு அமைய இலங்கை அரசு விடுத்த கோரிக்கையினை ஏற்று தமது உலக சுகாதார நிறுவன உயர் பதவியை துறந்த வைத்தியர் மகிபால இன்று சுகாதார அமைச்சின் செயலாளராகக் கடமையேற்றுள்ளார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction