லிட்ரோ உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களின் விலை இன்று (ஜூலை 2) நள்ளிரவு முதல் குறைக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
12.5 கிலோ எடை கொண்ட சிலிண்டரின் விலை ரூ.100 குறைக்கப்பட்டு, தற்போது ரூ. 3,690 ஆக உள்ளது.
5 கிலோ சிலிண்டர் ரூ.40 குறைக்கப்பட்டு, தற்போது ரூ.1482 ஆக உள்ளது.
2.3 கிலோ ரூ.18 குறைக்கப்பட்டு, தற்போது ரூ.694 ஆக உள்ளது.