பாதுகாப்பு நோக்கங்களுக்காக அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்ட வடக்கு மாகாணத்தில் உள்ள நிலங்கள் அரசியல் அனுகூலங்களைப் பெறும் நோக்கில் விடுவிக்கப்படாது என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
நேற்று (18) நடைபெற்ற யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின் போது அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.
காணி தொடர்பான பிரச்சினைகள் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரனுக்கும் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவிற்கும் இடையே வார்த்தைப் பரிமாற்றம் ஏற்பட்டதால் கூட்டம் சூடான திருப்பத்தை அடைந்தது.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சின் கீழ் கூட்டப்பட்ட இந்தக் கூட்டத்தில், வடக்கு மாகாணத்தில் நிலங்களை விடுவிப்பது தொடர்பான பிரச்சினைகள் உட்பட பல கவலைகளை நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் எழுப்பினார்.