தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட நடனக் கலைஞர் இவந்திகா குமாரி ஹேரத்தின் மரணம் தொடர்பான மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரேதப் பரிசோதனை அறிக்கையில், மரணம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளதாக மஹரகம பொலிஸார் தெரிவித்தனர்.
நிபுணர் மூலம் சடலத்தை பிரேத பரிசோதனை செய்து நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு நுகேகொட நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி, விசேட நீதித்துறை வைத்திய அதிகாரி தசநாயக்க தலைமையில் பி.சி.ஆர் பரிசோதனையின் பின்னர் சடலம் நேற்று பிரேத பரிசோதனைக்காக களுபோவில போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதன்போது பிரேதப்பிரிசோதனையில், தற்கொலை மரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது. உயிரிழந்த பெண் அறையில் மின்விசிறியில் கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டமை பிரேதப்பிரிசோதனையில் தெரியவந்தது.
இதனையடுத்து பிரேத பரிசோதனை அறிக்கை நுகேகொட நீதவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் உயிரிழந்த பெண் அடுக்குமாடி குடியிருப்பின் இரண்டாவது மாடியில் வர்த்தகர் ஒருவருடன் அந்தப் பெண் தங்கியிருந்தார் நிக்கவெரட்டிய, மில்லகொட பிரதேசத்தில் வசிக்கும் 40 வயதுடைய வர்த்தகர் திருமணமாகி மூன்று பிள்ளைகளை கொண்டவர் எனவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில் கடந்த 12ம் திகதி இரவு 11 மணியளவில் வர்த்தகர் வீட்டை விட்டு வெளியேறிய பின்னர் மீண்டும் திரும்பி வந்து பார்த்தபோது, அறையில் மின்விசிறியில் பெண் தூக்கில் தொங்கியபடி இருந்ததை பார்த்துள்ளார்.
இதனையடுத்து அவர் உடனடியாக கயிற்றில் இருந்து பெண்ணை விடுவித்து களுபோவில மருத்துவமனைக்கு கொண்டு சென்று போதும் அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மஹரகம பொலிஸாருக்கு தொலைபேசி அழைப்பு வந்ததையடுத்து, விசாரணைக்காக பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று குறித்த இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன்படி, அடுக்குமாடி குடியிருப்பில் பெண்ணுடன் தங்கியிருந்த வர்த்கர், அவரது பெற்றோர், சகோதரர் மற்றும் மூன்று பேரிடம் பொலிசார் வாக்குமூலம் பதிவு செய்தனர்.
மேலும் உயிரிழந்த பெண்ணும் விவாகரத்து பெற்றவர் எனவும், பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது
 
																						 
														 
     
     
    
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    