2024 ஜனவரியில் இலங்கையின் பணவீக்கம் 7% ஆக உயரக்கூடும் என இலங்கை மத்திய வங்கியின் (CBSL) ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க எச்சரித்துள்ளார்.
செவ்வாய்க்கிழமை (ஜனவரி 23) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த கலாநிதி வீரசிங்க, பெறுமதி சேர் வரி (VAT) அதிகரிப்பு மற்றும் ஏனைய வெளிப்புறக் காரணிகளால் பணவீக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக விளக்கமளித்தார்.
VAT (திருத்தம்) மசோதா 11 டிசம்பர் 2023 அன்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பின்னர், 01 ஜனவரி 2024 முதல் நடைமுறைக்கு வரும் வகையில், VAT 15% இலிருந்து 18% ஆக அதிகரிக்கப்பட்டது.