இன்று (24) அதிகாலை 3 மணி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சனா விஜேசேகர தெரிவித்துள்ளார்.
ஒக்டென் 92 பெட்ரோல் லீட்டர் ஒன்றின் புதிய விலை 420 ரூபாவாகவும்,
ஒக்டென் 95 பெட்ரோல் லீட்டர் ஒன்றின் புதிய விலை 450 ரூபாவாகவும்,
ஒட்டோ டீசல் லீட்டர் ஒன்றின் புதிய விலை 400 ரூபாவாகவும்,
சுப்பர் டீசல் லீட்டர் ஒன்றின் புதிய விலை 445 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.