free website hit counter

பெற்ற மகளை கொடூரமாக தாக்கிய தந்தை மற்றும் சிறிய தந்தை - பரிதாபமாக பலியான 14 வயது சிறுமி!

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

காதலித்ததாக கூறி 14 வயது மாணவி அடித்துக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ள நிலையில்

சம்பவம் தொடர்பில் சிறுமியின் தந்தையும், சிறிய தந்தையும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கம்பளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மவுன்ட்டெம்பல் பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், சிறுமியின் காதல் விவகாரம் காரணமாக சிறுமியின் சிறிய தந்தை நேற்றைய தினம் அவரை தாக்கிய நிலையில், நேற்று காலை சிறுமி உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

உடல்நிலை பாதிக்கப்பட்டதால் சிறுமி புலம்பிய போது, சிறுமியின் தந்தை மீண்டும் தாக்கியதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

பின்னர் சிறுமியை அவரது தாயார் அருகில் உள்ள வீட்டிற்கு அழைத்துச் சென்ற பின்னர் மயக்கமடைந்த சிறுமியை கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் கம்பளையில் உள்ள பிரபல மகளிர் பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் நிபுனி நுவந்திகா பண்டார (14) என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் உயிரிழந்த சிறுமியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கம்பளை வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

கம்பளை நீதிமன்றத்தின் நீதவானின் மரண விசாரணைகளின் பின் சடலம் மீதான பிரேத பரிசோதனை இடம்பெற்று சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என பொலிஸார் தெரிவித்தனர். மேலும் சம்பவம் தொடர்பில் சிறுமியின் தந்தை மற்றும் சிறிய தந்தை ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், அவர்களை இன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய நடவடிக்கைகள் எடுத்துள்ளதாக தெரிவித்த பொலிஸார், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction