free website hit counter

முன்னணி துரித உணவு விற்பனை நிலையத்தில் வெடிப்புச் சம்பவம் பதிவாகியுள்ளது

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

கொழும்பு 7, ரீட் அவென்யூவில் உள்ள கறுவாத்தோட்டத்தில் உள்ள கட்டிடமொன்றில் வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவா தெரிவித்தார்.

பழைய ரேஸ் கோர்ஸ் கட்டிடத்தின் தரை தளத்தில் அமைந்துள்ள சர்வதேச உணவு பதப்படுத்தும் நிறுவனத்திற்கு சொந்தமான ஹோட்டல் வளாகத்தில் இந்த வெடிப்பு நிகழ்ந்துள்ளது.

எரிவாயு கசிவு காரணமாக வெடிப்பு ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும், கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினர் மற்றும் பொலிசார் இணைந்து தீயை கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பேச்சாளர் தெரிவித்தார்.

இதுவரை காயங்களோ, உயிரிழப்புகளோ ஏற்படவில்லை. வெடிவிபத்துக்கான காரணத்தை அறிய, அரசாங்கப் பகுப்பாய்வாளர் சம்பவ இடத்தை ஆய்வு செய்ய உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: