2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 01 ஆம் திகதி முதல் மின்சார கட்டணத்தை குறைக்க முன்மொழியப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
உள்நாட்டில் முதல் 30 அலகுகளுக்கு ஒரு யூனிட் மின்சாரத்திற்கு அறவிடப்படும் கட்டணத்தை 02 ரூபாவினால் குறைக்க முன்மொழியப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் விளக்கமளித்துள்ளார். அதன்படி, அந்த வகையில் ஒரு மின் அலகுக்கு புதிய கட்டணம் ரூ. 06.
31-60 க்கு இடையில் நுகரப்படும் யூனிட்களுக்கு விதிக்கப்படும் கட்டணம் ரூ.11 குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது, இதன் மூலம் யூனிட் ஒன்றுக்கு வசூலிக்கப்படும் விகிதம் ரூ.09 ஆக குறைக்கப்படும்.
இதேவேளை, 60-90 யூனிட்களுக்கான கட்டணம் ரூ.18 ஆக குறைக்கப்பட உள்ளது. இந்த வகையில் தற்போது யூனிட்டுக்கு ரூ.30 வசூலிக்கப்படுகிறது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும், 90 முதல் 180 வரையிலான நுகர்வு அலகுகளுக்கு அறவிடப்படும் கட்டணமானது 20 ரூபாவினால் குறைக்கப்படும் எனவும், இதன் மூலம் யூனிட் ஒன்றிற்கு அறவிடப்படும் வீதம் 30 ரூபாவாக குறைவதாகவும் விஜேசேகர தெரிவித்தார்.
மேலும், இது தொடர்பான பிரேரணை நாளை (07) அல்லது திங்கட்கிழமை (10) பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் அதற்கு அங்கீகாரம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.