free website hit counter

கண்டியில் இராஜதந்திர நிகழ்வு : ஜனாதிபதி அலுவலகம் விளக்கம்

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
கண்டியில் இராஜதந்திர நிகழ்வு.
புதிதாக நியமிக்கப்பட்ட 11 தூதுவர்கள் மற்றும் 6 உயர்ஸ்தானிகர்கள் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ்களை கையளித்த 02 ஆம் திகதி கண்டி ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற இராஜதந்திர நிகழ்வு தொடர்பில் சமூக ஊடகங்களில் பரவிவரும் பொய்யான தகவல்கள் தொடர்பில் ஜனாதிபதி அலுவலகம் கவனம் செலுத்தியுள்ளது.

இந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்காக விசேட பாதுகாப்புடன் தூதரக அதிகாரிகளை பொலிஸார் அழைத்துச் செல்வதை சில குழுக்கள் விமர்சித்துள்ளன.

பெப்ரவரி 04 ஆம் திகதி 75 ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் உட்பட பல விசேட நிகழ்வுகள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் கண்டியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதேவேளை கண்டியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இந்த நிகழ்ச்சியை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

1961 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இராஜதந்திர உறவுகளுக்கான வியன்னா உடன்படிக்கை உட்பட உலகின் நாகரீக நாடுகளின் பாரம்பரியத்திற்கு மதிப்பளித்து, இலங்கையில் அதிகாரத்தில் இருக்கும் எந்தவொரு அரசாங்கமும் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் தங்கள் நற்சான்றிதழ்களை சமர்ப்பிக்க வரும்போது அவர்களுக்கு இராஜதந்திர அங்கீகாரம் வழங்குவது பொறுப்பாகும். .

இவ்வாறானதொரு பின்னணியில், பொதுமக்களை தவறாக வழிநடத்தும் பொய்யான தகவல்களை பரப்பும் முயற்சிகளை ஜனாதிபதி அலுவலகம் வன்மையாக நிராகரிக்கிறது என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction