website analysis

வி.எஸ். பாபு உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி!

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சென்னை பெரம்பூரில் வைக்கப்பட்டுள்ள கொளத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் வி.எஸ். பாபுவின் உடலுக்கு முதல்வர் சி. ஜோசப் விஜய் அஞ்சலி செலுத்தினார்.

மூச்சுத் திணறல் பிரச்னை காரணமாக, செப். 9ஆம் தேதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கொளத்தூர் தொகுதி வி.எஸ். பாபு (75), தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த நிலையில் இன்று (நவ. 19) பிற்பகல் 2.24 மணிக்கு மாரடைப்பால் காலமானதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது.

இவரது மறைவைத் தொடர்ந்து வி.எஸ். பாபுவின் உடல் மருத்துவமனையில் இருந்து இன்று மாலை பெரம்பூரில் உள்ள அவரது இல்லத்திற்குச் கொண்டுச் செல்லப்பட்டு, அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தமிழ்நாடு முதல்வரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், வி.எஸ். பாபுவின் வீட்டுக்கு நேரில் சென்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். வி.எஸ். பாபுவின் மனைவி, அவரது பிள்ளைகளின் கைகளைப் பற்றி முதல்வர் விஜய் ஆறுதல் தெரிவித்தார்.

அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், நிர்மல்குமார், ஆதவ் அர்ஜூனா, கே.ஏ.எஸ், ஸ்ரீநாத், ராஜீவ் உள்ளிட்டோரும் வி.எஸ். பாபுவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

வி.எஸ். பாபுவின் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்