இந்த வருடத்தின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் வரிக்குப் பிந்திய நிகர இலாபத்தை இலங்கை மின்சார சபை (CEB) அறிவித்துள்ளது.
முன்னதாக, ஜனவரி - மார்ச் காலாண்டில் CEB ரூ.84.67 பில்லியன் வரிக்குப் பின்னரான நிகர லாபத்தைப் பதிவு செய்தது.
CEB 2024 முதல் பாதியில் ரூ.119.20 பில்லியன் மொத்த லாபத்தைப் பதிவு செய்துள்ளது.
2024 ஜூன் காலாண்டில் பதிவான ரூ.34.53 பில்லியன் நிகர லாபம் 2023 ஜூன் காலாண்டில் பதிவான ரூ.20.65 பில்லியனுடன் ஒப்பிடுகையில் 67.2% அதிகமாகும். (நியூஸ்வைர்)