சர்வதேச நாணய நிதியம் (IMF) இலங்கையின் வளர்ச்சி 2024-25 ஆம் ஆண்டில் 3% மிதமாக இருக்கும் என கணித்திருந்த போதிலும், அது தற்போது 4.4% ஆக இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
பொது நிகழ்வொன்றில் உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி, இலங்கையின் வளர்ச்சி அடுத்த ஆண்டு 5 வீதத்தை எட்டும் சாத்தியம் இருப்பதாக தெரிவித்தார்.
ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவிக்கையில், முன்னாள் அரசாங்கம் ஆட்சியை கையளிப்பதற்கு முன்னர் நாட்டை அபிவிருத்தி செய்தது.
“இந்த அரசுக்கு இது தெரிந்திருந்தால் மட்டுமே இலக்கை அடைய முடியும். இந்த இலக்கை அடைய அவர்கள் உழைக்க வேண்டும். தெரியாவிட்டால் தாத்தாவிடம் கேளுங்கள்’’ என்று தம்மை எதிர்ப்பாளர்கள் சிலர் அடிக்கடி குறிப்பிடும் பெயரை பாவித்து கூறினார்,
உதய ஆர்.செனவிரத்ன அறிக்கையின் பரிந்துரைகளுக்கு அமைய, அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு, புதிதாக நிறுவப்பட்ட பாராளுமன்றத்தில் முன்னெடுக்கப்படும் முதலாவது விடயமாக அமையும் எனவும் ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தினார்.
மேலும் அரசு மக்களுக்கு ஊதியம் வழங்கவும், முடிந்த அளவு சலுகைகளை வழங்கவும் வலியுறுத்தினார். (நியூஸ்வயர்)