free website hit counter

ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
விண்ணப்பதாரி 18 தொடக்கம் 35 வயதிற்கும் இடைப்பட்டவராக இருத்தல் வேண்டும்.
தென் மாகாணத்திலுள்ள பாடசாலைகளில் சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில மொழி மூல பாடங்களில் நிலவுகின்ற ஆசிரிய வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இலங்கை ஆசிரியர் சேவை 111 இற்கு பட்டதாரிகளை இணைத்துக் கொள்வதற்கான திறந்த போட்டி பரீட்சைக்கு தென் மாகாண பொதுச் சேவை ஆணைக்குழு விண்ணப்பங்களை கோரியுள்ளது.

தென் மாகாணத்தை நிரந்தர வசிப்பிடமாகக் கொண்ட பட்டதாரிகள் அல்லது விண்ணப்ப முடிவுத்திகதிக்கு ஆகக் குறைந்தது முன்னைய மூன்று வருடங்கள் அல்லது அதற்கு கூடியகாலம் கணவன் அல்லது மனைவி தென் மாகாணத்தை வசிப்பிடமாகக் கொண்டிருந்த பட்டதாரிகளுக்கு இதற்கு விண்ணப்பிக்க முடியும்.

க. பொ. த. சாதாரண தரப் பரீட்சையில் சிங்களம், தமிழ் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களில் கட்டாயம் சித்தியடைந்திருக்க வேண்டும்.

மேலும் தமது பட்டத்துடன் இணைந்ததாக விண்ணப்பம் கோரப்பட்டுள்ள பாடங்களில் மூன்று பாடத்திற்கு தாம் வசிக்கும் பிரதேச செயலாளர் பிரிவு உட்பட அண்மித்த ஐந்து பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை விண்ணப்பதாரி 18 தொடக்கம் 35 வயதிற்கும் இடைப்பட்டவராக இருத்தல் வேண்டும்.

இம்முறை மொத்தம் 56 பாடங்களுக்கு தென் மாகாண பொதுச் சேவை ஆணைக்குழு விண்ணப்பங்களை கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction