website analysis

அனோஜனுக்கு விடுதலை !

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்நோக்கியிருந்த,  சிவராசா அனோஜனுக்கு விடுதலை கிடைத்துள்ளது. அவர் மீது சுமத்தப்பட்டிருந்த அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அவரது விடுதலைக்கான முயற்சிகளில் முன்னின்று செயற்பட்டமை தொடர்பில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை,  ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று சந்தித்து, அனோஜனது பெற்றோர்கள் தமது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்.
 
சிவராசா அனோஜனின் விடுதலைகாக சவூதி அரேபிய அரசுக்கும், அதற்காக பேதங்களேதுமின்றி தலையீடு செய்த அனைவருக்கும் விசேட நன்றி உரித்தாக வேண்டும் என ஜனாதிபதியும் குறிப்பிட்டுள்ளார்.

தமது மகனை மரண தண்டனையிலிருந்தும், அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிப்பதற்காகவும், அக்கறையுடன் செயற்பட்ட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும், வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா ஆகியோருக்கும், மற்றும் இருநாட்டுத் தூதரக அதிகாரிகளுக்கும், அனோஜனின் பெற்றோர்கள் தமது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்