free website hit counter

ஆயுர்வேத ஸ்பா என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதி

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
இரத்மலானையில் ஆயுர்வேத ஸ்பா என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கல்கிஸ்ஸ குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய நேற்று மாலை இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நான்கு சந்தேக நபர்களில் விபச்சார விடுதியின் ஆண் மேலாளர் மற்றும் அதன் சேவைகளுக்கு உதவிய மூன்று பெண்களும் அடங்குவர்.

சந்தேகநபர்கள் வெலிமடையைச் சேர்ந்த 40 வயதுடைய ஆண் ஒருவரும், களுத்துறை மற்றும் பொல்பிட்டிஹிகமவைச் சேர்ந்த 19, 20 மற்றும் 26 வயதுடைய மூன்று பெண்களுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இன்று கல்கிசை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction