free website hit counter

58 கைதிகளை காணவில்லை

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
கொழும்பில் நேற்றைய தினம் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதல்களில் கைதிகளின் பங்கேற்பு குற்றச்சாட்டுகள் தொடர்பில்
இலங்கை சிறைச்சாலைகள் திணைக்களம் விளக்கமளித்துள்ளது. வடரெகா திறந்தவெளி சிறைச்சாலை முகாமில் உள்ள கைதிகளும் தாக்குதல் நடத்தியவர்களில் ஒரு பகுதியினர் என்று கூறப்படும் செய்திகளை சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க மறுத்துள்ளார். சிறைச்சாலை திணைக்களத்தின் வழமையான புனர்வாழ்வு வேலைத்திட்டத்தின் கீழ் 3 கட்டுமான தளங்களில் புனர்வாழ்வு பணிகளுக்காக வடரேகா சிறைச்சாலையில் இருந்து 181 கைதிகள் சிவில் உடையில் கொண்டு செல்லப்பட்டதாக அவர் கூறினார்.

இந்த கைதிகள் நேற்று கொள்ளுப்பிட்டி, ராஜகிரிய மற்றும் பத்தரமுல்லை ஆகிய இடங்களில் உள்ள இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு மீண்டும் சிறைச்சாலைக்கு திரும்பும் போது பொதுமக்களால் தாக்கப்பட்டதாக சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார். நேற்று மாலை தலஹேன பகுதியில் கைதிகளை ஏற்றிச் சென்ற பேருந்தில் இருந்து பொதுமக்கள் அப்புறப்படுத்தியதாகவும், அவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் அவர் கூறினார். இலங்கை பொதுஜன பெரமுன (SLPP) தலைமையிலான கொழும்பில் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதல்களில் கைதிகள் அங்கம் வகித்தவர்கள் என நினைத்து பொதுமக்கள் இவ்வாறு செயற்பட்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

புனர்வாழ்வுத் திட்டத்தின் ஒரு பகுதியாக கட்டுமானப் பணிகளுக்கு அனுப்பப்பட்ட 181 கைதிகளில் 58 கைதிகள் தற்போது காணாமல் போயுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். கைதிகள் யாரேனும் உதவிக்காக தம்மை அணுகினால் அவர்களுக்கு உதவுமாறும் அவர்களை அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்குமாறும் சந்தன ஏக்கநாயக்க பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction