இலங்கையில் அன்மைக்காலமாக பொருளாதார வீழ்ச்சியினாலும், மக்கள் போராட்டங்களினாலும், குழப்பமுற்றிருந்த இலங்கை அரசியற் களம், சுமுக நிலையைத் தோற்றுவிக்க முயல்கிறது.
இன்று நடைபெற்ற ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு கூட்டத்தில் ஏகமனதாக எடுக்கப்பட்ட தீர்மானத்தில் பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தை பலப்படுத்துவதற்கும் தொடர்ந்து செயற்படுவதற்கும் உடன்பாடு காணப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமைகள் குறித்து அரசாங்கம் மேற்கொள்ள வேண்டிய உடனடி நடவடிக்கைகள் தொடர்பாக இன்று மேற்கொள்ளப்பட்ட விசேட கலந்துரையாடலில் பங்குகொண்ட ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தை வலுவாக வைத்திருக்கும் பிரேரணையை ஏகமனதாக நிறைவேற்றினர். இன்றைய தீர்மானத்தின்படி, அடுத்த சில வாரங்களுக்குள் மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.
இதேவேளை, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவது உள்ளிட்ட அரசியலமைப்பில் புதிய திருத்தம் ஒன்றை முன்வைக்கும் பிரேரணையை ஐக்கிய மக்கள் சக்தி சபாநாயகரிடம் கையளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.