கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்துவதற்கு பொதுமக்கள் இரண்டு வாரங்கள் வீடுகளிற்குள் இருக்கவேண்டும் என இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்ணான்டோபுள்ளே வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புதிய வைரஸ் காரணமாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதிய வைரஸ் வேகமாக பரவுகின்றது, இதன் காரணமாகவே இரண்டு வாரங்களிற்கு வீடுகளிற்குள் இருக்குமாறு மக்களை கேட்டுக்கொள்கின்றேன் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அறிகுறிகளை வெளிப்படுத்தவர்களும் நடமாடுகின்றனர் இதன் காரணமாக வெளியில் நடமாடினால் ஆபத்து என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
 
																						 
														 
     
     
    
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    