free website hit counter

உலகக் கோப்பை செஸ் இறுதிப் போட்டி - கார்ல்சன் சாம்பியன்!

விளையாட்டு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
உலக கோப்பை செஸ் இறுதிப் போட்டியில் கார்ல்சனை பிரக்ஞானந்தா எதிர்கொண்டார்.
உலக கோப்பை செஸ் தொடர் அஜர்பைஜானில் உள்ள பாகு என்ற நகரில் நடைபெற்று வருகிறது. இதன் அரை இறுதியில் இந்திய கிராண்ட் மாஸ்டரான சென்னையை சேர்ந்த பிரக்ஞானந்தா உலக தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள அமெரிக்காவின் பேபியானோ கருணாவுடன் மோதினார். அரையிறுதி சுற்றில் இரண்டு போட்டிகள் நடைபெற்றன. இந்த போட்டிகள் 'டிரா' ஆனது. இதைத் தொடர்ந்து டை-பிரேக்கர் சுற்று நடத்தப்பட்டு, இதில் வெற்று பெறுவோர் இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியும் என்ற நிலை உருவானது.

அதன்படி டை-பிரேக்கர் சுற்றில் பிரக்ஞானந்தா, உலகின் மூன்றாம் இடத்தில் வீரரான ஃபேபியானோ கருணாவை எதிர்கொண்டு விளையாடினார்.

பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் பிரக்ஞானந்தா தன்னை எதிர்த்து விளையாடிய கருணாவை 3.5-2.5 புள்ளிகள் அடிப்படையில் வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறினார். இதன் மூலம் உலக கோப்பை செஸ் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இளம் வீரர் என்ற பெருமையை பிரக்ஞானந்தா பெற்றார்.

இறுதிப் போட்டியில் பிரக்ஞானந்தா மேக்னஸ் கார்ல்சனுடன் மோதினார். இறுதிப் போட்டியின் முதல் இரண்டு சுற்றுகள் சமனில் முடிந்தன.

இதைத் தொடர்ந்து இன்று டை பிரேக்கர் சுற்று நடைபெற்றது. இதில் பிரக்ஞானந்தா வெள்ளை நிற காய்களுடன் விளையாடினார். மேக்னஸ் கார்ல்சன் மற்றும் பிரக்ஞானந்தா இடையிலான டை பிரேக்கர் சுற்றின் முதல் போட்டி பரபரப்பாக நடைபெற்றது. இதில் கார்ல்சன் வெற்றி பெற்றார்.

இதைத் தொடர்ந்து இரண்டாவது சுற்று துவங்கியது. இந்த சுற்றும் 25 நிமிடங்கள் நடைபெற்றது. இதில் பிரக்ஞானந்தா கருப்பு நிற காய்களுடன் விளையைாடினார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த சுற்றும் சமனில் முடிந்தது. அந்த வகையில் மேக்னஸ் கார்ல்சன் முதல் சுற்றில் வெற்றி பெற்று இருந்ததால், சாம்பியனாக அறிவிக்கப்பட்டார்.
காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: