free website hit counter

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற முதலாவது டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்தது!

விளையாட்டு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
இலங்கை-பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்துள்ளது.
பங்களாதேஷின் சாட்டோகிராமில் தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில், முதல் இன்னிங்சை ஆடிய இலங்கை அணி 397 ஓட்டங்கள் குவித்தது. ஏஞ்சலோ மேத்யூஸ் 199 ஓட்டங்களும், சண்டிமல் 66 ஓட்டங்களும், குசால் மெண்டிஸ் 54 ஓட்டங்களும் எடுத்தனர். பங்களாதேஷ அணி தரப்பில் நயீம் 6 விக்கெட்டுகளும், ஷாகிப் அல் ஹசன் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினார்.

பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய பங்களாதேஷ் 465 ஓட்டங்களுக்கு ஆல் அவுட் ஆனது. தமிம் இக்பால் 133 ஓட்டங்களும், ரஹிம் 105 ஓட்டங்களும், லித்தான் தாஸ் 88 ஓட்டங்களும் எடுத்தனர். இலங்கை அணி தரப்பில் ரஜிதா 4 விக்கெட்டுகளும், அசிதா பெர்னாண்டோ 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி, கடைசி நாளான இன்று 6 விக்கெட் இழப்புக்கு 260 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது போட்டி டிராவில் முடிவதாக அறிவிக்கப்பட்டது.

இலங்கை அணியில் டிக்வெல்லா 61 ஓட்டங்களுடனும், சண்டிமல் 39 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர். அணித்தலைவர் கருணாரத்னே 52 ஓட்டங்கள் எடுத்தார். பங்களாதேஷ அணி தரப்பில் டைஜூல் இஸ்லாம் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

ஏஞ்சலோ மேத்யூஸ் ஆட்டநாயகன் விருதினை தட்டிச் சென்றார்.

இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டாக்காவில் 23ஆம் திகதி தொடங்க உள்ளது.   

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction