free website hit counter

போர்த்துகல் கால்பந்து அணியின் புதிய பயிற்சியாளர் நியமனம்

விளையாட்டு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
போர்த்துகல் பயிற்சியாளராக இருந்த பெர்னாண்டோ சான்டோஸ் ராஜினாமா செய்தார்.
கத்தாரில் கடந்த ஆண்டு நடந்து முடிந்த உலகக்கோப்பை கால்பந்து தொடரில் போர்த்துகல் அணி, காலிறுதியில் எதிர்பாராதவிதமாக மொராக்கோவிடம் தோல்வியடைந்து வெளியேறியது. இதையடுத்து போர்த்துகல் அணியின் பயிற்சியாளராக இருந்த பெர்னாண்டோ சான்டோஸ், தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இந்நிலையில் ஸ்பெயினை சேர்ந்த ராபர்ட்டோ மார்ட்டினஸ் (வயது 49), போர்த்துகல் கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இதற்கு முன்பு பெல்ஜியம் கால்பந்து அணியின் பயிற்சியாளராக இருந்தார். கத்தார் உலகக்கோப்பை போட்டியில் குரூப் சுற்றில் பெல்ஜியம் அணி வெளியேறியதைத் தொடர்ந்து, மார்ட்டினஸ் ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

போர்த்துகல் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டது குறித்து பேசிய ராபர்ட்டோ, "உலகின் மிகவும் திறமையான அணிகளில் ஒன்றான போர்ச்சுகல் அணியில் இணைந்து செயல்படுவதில் மகிழ்ச்சியடைகிறேன்" என்று கூறினார்.
காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: