free website hit counter

உலக பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் வரலாற்றில் மகுடம் சூடிய முதல் ஸ்பெயின் வீராங்கனை முகுருஜா

விளையாட்டு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

‘டாப்-8’ வீராங்கனைகள் பங்கேற்ற டபிள்யூ.டி.ஏ. இறுதி சுற்று எனப்படும் உலக பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி மெக்சிகோவில் உள்ள குவாடலஜரா நகரில் நடந்தது.

இதில் நேற்று முன்தினம் இரவு நடந்த இறுதி ஆட்டத்தில் 2 கிராண்ட்ஸ்லாம் வென்றவரும், முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையுயான ஸ்பெயினின் கார்பின் முகுருஜா, 8-ம் நிலை வீராங்கனையான அனெட் கோன்டாவெய்ட்டை (எஸ்தோனியா) எதிர்கொண்டார்.

1 மணி 38 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் முகுருஜா 6-3, 7-5 என்ற நேர்செட்டில் கோன்டாவெய்ட்டை சாய்த்து சாம்பியன் பட்டத்தை வசப்படுத்தினார். இதன் மூலம் 49 ஆண்டு கால பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் வரலாற்றில் மகுடம் சூடிய முதல் ஸ்பெயின் வீராங்கனை என்ற பெருமையை பெற்றார். ஒட்டுமொத்தத்தில் அவரது 10-வது சர்வதேச பட்டம் இதுவாகும்.

வாகை சூடிய முகுருஜா மொத்தம் ரூ.11½ கோடியை பரிசாக அள்ளினார். 2-வது இடம் பிடித்த கோன்டாவெய்டுக்கு ரூ.5½ கோடி கிடைத்தது. வெற்றிக்கு பிறகு 28 வயதான முகுருஜா கூறுகையில் ‘என்னால் சிறப்பாக செயல்பட முடியும் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்து இருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த வெற்றியின் மூலம் தரவரிசையில் நல்ல நிலைக்கு வந்து இருக்கிறேன்’ என்றார்.

வெற்றியின் மூலம் முகுருஜா தரவரிசையில் 5-வது இடத்தில் இருந்து 3-வது இடத்துக்கு முன்னேறினார். ஆஷ்லி பார்ட்டி (ஆஸ்திரேலியா) முதலிடத்திலும், சபலென்கா (பெலாரஸ்) 2-வது இடத்திலும், கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு) 4-வது இடத்திலும் தொடருகின்றனர். கோன்டாவெய்ட் ஒரு இடம் ஏற்றம் கண்டு 7-வது இடத்தை பெற்றுள்ளார்

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: