free website hit counter

நோர்வே சதுரங்கப் போட்டியில் குகேஷ் கார்ல்சனை வீழ்த்தினார்

விளையாட்டு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ஒரு பரபரப்பான போட்டியில், கார்ல்சனை 3-0 என்ற கணக்கில் தோற்கடித்து குகேஷ் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றார். இந்த வெற்றியின் மூலம், நார்வே கிளாசிக்கல் சர்வதேச சதுரங்க தரவரிசையில் குகேஷ் 8.5 புள்ளிகளுடன் 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்

நார்வே கிளாசிக்கல் சர்வதேச சதுரங்கப் போட்டி ஸ்டாவஞ்சரில் நடைபெற்று வருகிறது. ஓபன் பிரிவில், தற்போதைய உலக சாம்பியனான குகேஷ் (இந்தியா), 5 முறை உலக சாம்பியனான மேக்னஸ் கார்ல்சன் (நோர்வே), அர்ஜுன் எரிகைசி (இந்தியா) உள்ளிட்ட 6 வீரர்கள் பங்கேற்கின்றனர். இதில், ஒவ்வொரு வீரரும் மற்ற வீரர்களுடன் இரண்டு முறை விளையாட வேண்டும்.

இந்த நிலையில், நார்வே சதுரங்கத் தொடரின் 6வது சுற்றில் இந்தியாவின் குகேஷ், நார்வேயின் மேக்னஸ் கார்ல்சனை எதிர்கொண்டார். உலகின் நம்பர் 1 சதுரங்க வீரரான கார்ல்சனுக்கும், உலக சதுரங்க சாம்பியனான குகேஷ்க்கும் இடையிலான போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

ஒரு பரபரப்பான போட்டியில், கார்ல்சனை 3-0 என்ற கணக்கில் தோற்கடித்து குகேஷ் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றார். இந்தத் தொடரில் இரு வீரர்களின் முதல் ஆட்டத்தை கார்ல்சன் வென்றார், இந்தப் போட்டியில் குகேஷ் வெற்றி பெற்றார்.

இந்த வெற்றியின் மூலம், நார்வே கிளாசிக்கல் சர்வதேச சதுரங்க தரவரிசையில் குகேஷ் 8.5 புள்ளிகளுடன் 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். கார்ல்சன் 9.5 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: