free website hit counter

சென்னை சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டிகளுக்கான டிக்கெட் விலை வெளியீடு

விளையாட்டு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
சென்னையில் நடைபெறும் சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டிகளுக்கான டிக்கெட் விலை வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை ஓபன் டபிள்யு.டி.ஏ. 250 சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கம் ஸ்டேடியத்தில் செப்டம்பர் 12-ந்தேதி தொடங்குகிறது. செப்டம்பர் 18-ந்தேதி வரை இந்த போட்டி ஒரு வாரம் நடக்கிறது. சமீபத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டியை தமிழக அரசு மிகவும் பிரம்மாண்ட முறையில் நடத்தி முடித்தது.

தற்போது சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டியை நடத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆதரவு கொடுத்துள்ளார். இந்த போட்டியின் முக்கிய ஸ்பான்சராக தமிழக அரசு உள்ளது.

இந்த நிலையில் சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டிகளுக்கான டிக்கெட் விலை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி 7 நாட்கள் நடைபெறும் போட்டிகளுக்கான சீசன் டிக்கெட்டுகளுக்கு ரூ.1,000, ரூ.2,000, ரூ.3,000 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் 12-ந்தேதி முதல் 15-ந்தேதி வரையிலான நாட்களுக்கு தினசரி டிக்கெட் கட்டணமாக ரூ.100, ரூ.200, ரூ.300 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடைசி மூன்று நாட்களுக்கான டிக்கெட் கட்டணமாக ரூ.200, ரூ.400, ரூ.600 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: