free website hit counter

பிரபல நட்சத்திர கிரிக்கெட் வீரர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவிப்பு!

விளையாட்டு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக நியூசிலாந்து அணியின் நட்சத்திர

வீரர் ராஸ் டெய்லர் அறிவித்துள்ளார்.

ராஸ் டெய்லர் இதுவரை 445 சர்வதேச போட்டிகளில் விளையாடி, 18,074 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 40 சதங்களும் அடக்கமாகும்.

வரும் சனிக்கிழமை தொடங்கவுள்ள வங்கதேச அணிக்கு எதிரான நியூசிலாந்தின் டெஸ்ட் தொடருக்கு பிறகு டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாகவும், அடுத்த ஆண்டு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நடைபெறவுள்ள அவுஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு எதிரான நியூசிலாந்தின் ஒருநாள் தொடருக்கு பிறகு ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாகவும் அறிவித்துள்ளார்.

மேலும் 17 ஆண்டுகளாக தனக்கு ஆதரவளித்தவர்களுக்கு நன்றி எனவும் தெரிவித்துள்ளார்.

மூன்று வகை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் 100 ஆட்டங்களுக்கு மேல் விளையாடிய முதல் சர்வதேச வீரர் என்ற பெருமையும் ராஸ் டெய்லர் வசமே உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction